மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி தி...
நமோ நமச்சிவாய..! சாய் பல்லவியின் தண்டேல் பட பாடல் அப்டேட்!
நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் 2ஆவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார். நாக சைதன்யாவின் 23வது படமான ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நமோ நமச்சிவாய என்ற பாடல் ஜன.4ஆம் தேதி மாலை 5.04மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படம் பிப்.7ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.
சமீபத்தில் தமிழில் வெளியான அமரன் படத்திலும் சாய் பல்லவி சிறப்பாக நடித்ததாக பலரும் பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.