2026-ல் ஆட்சி அமைக்க உறுதியேற்போம்: மு.க. ஸ்டாலின்
2026- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்க உறுதியேற்போம் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம்2026- ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்!
தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கட்சிக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்தனர் என மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ. 32.50 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!