பட்டியலினத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரை! சி.டி. ரவிகுமாா் பின்னணி!
சென்னை: புத்தாண்டு தினத்தில் ரௌடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - போலீஸ் விசாரணை
சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2021- ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ரௌடி நவீன் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். ரௌடி அலெக்ஸ் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரௌடி நவீன், வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்திருந்தார். பின்னர் அவர் அம்பத்தூர் நோக்கி சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் நவீனை சுற்றி வளைத்து வெட்டியது. இந்தச் சம்பவத்துக்கு ரௌடி அலெக்ஸ் கூட்டாளிகள்தான் காரணம் என நவீனின் கூட்டாளிகள் சந்தேகித்தனர்.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்றிரவு நடந்து கொண்டிருக்கும் போது வில்லிவாக்கம் பாரதி நகருக்குள் புகுந்து கும்பல் ஒன்று ரௌடி அலெக்ஸ் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர். சத்தம் கேட்டு அலெக்ஸ் வீட்டின் அருகில் வசிக்கும் வில்சன் என்பவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அலெக்ஸ் வீட்டின் கதவு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை நடத்தினர். தடயங்களை போலீஸார் சேகரித்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலைத் தேடி வருகிறார்கள். புத்தாண்டையொட்டி ரௌடி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.