செய்திகள் :

Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி..." - ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து

post image
நடிகர் அதர்வா தம்பி ஆகாஷின் 'நேசிப்பாயா' படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேசிப்பாயா'. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது.

நேசிப்பாயா
நேசிப்பாயா

அதில் பேசிய அதர்வா, "என்னுடைய தம்பி ஆகாஷ் நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதிதிக்கும் இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திற்கு நடந்த ஒரு நல்ல விஷயம் என் தம்பிக்கும் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் யுவன் சாரின் இசைதான். இந்த விழாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பா இறந்த அந்த ஒரு நாள் இரவில் எங்கள் மூன்று பேரின் வாழும் இருண்டு போய்விட்டது. அதன் பிறகு எங்கள் அம்மாதான் எங்களை வழிநடத்தினார். அவர்கள் வாயால் என் தம்பிக்கு இந்த மேடையில் வாழ்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஏன் அம்மாவை மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவிக்கச் சொன்னேன் என்றால் தன்னுடைய பசங்களின் கனவைத் தங்களுடைய கனவுபோல் நினைக்கின்ற அம்மாக்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் எங்கள் அம்மாவும் ஒருவர்" என்று அம்மாவை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவிக்க வைத்திருக்கிறார்.

அதர்வா
அதர்வா

தொடர்ந்து பேசிய அவர், "ஆகாஷிற்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழ்த்துக்கள் ஆகாஷ். கப்பு முக்கியம்டா தம்பி. ரொம்ப முக்கியம் பார்த்துச் செய்" என்று கலகலப்பாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மாணவி வன்கொடுமை வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கணும்..." - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

'அமரன்' பட ஹிட்டிற்கு பிறகுச் சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு... மேலும் பார்க்க

Madha Gaja Raja: "அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து" - விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டத் திரைப்படம் `மதகஜராஜா'.ஜ... மேலும் பார்க்க

``அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B', `உள்ளம் கேட்குமே', `உன்னாலே உன்னாலே', போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ... மேலும் பார்க்க