ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
புது தில்லி: ஜனவரி மாதத்தில் நாடெங்கிலும் பெரும்பாலான பகுதிகளில் (கிழக்கு, வட மேற்கு, மேற்கு-மத்திய மண்டலங்களில் சில பகுதிகளைத் தவிர்த்து) குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்றும், அதேபோல வட மேற்கு, மத்திய மற்றும் கிழிக்கு பகுதிகளிலும், தென் தீபகற்பத்தின் மத்திய பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜனவரியில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரை மழைப்பொழிவின் அளவு இயல்பைவிட குறைவாகவே இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ‘சராசரி மழைப்பொழிவு’ அளவில் 86 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் குளிர் அலை தீவிரமாக இருக்கும்:
மத்திய இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குளிர் அலை இயல்பைவிட கூடுதல் நாள்கள் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.