பட்டாசு ஆலை விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்
பிக் பாஸ் 8: விஷால் உடன் காதலா? அன்ஷிதா வெளியிட்ட விடியோ!
நடிகை அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அன்ஷிதா வெளியேறினார். அவர் வெளியேறியதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரும் வருந்தினர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அன்ஷிதா விடியோ எதையும் வெளியிடாமல் இருந்தார். தற்போது முதல்முறையாக சமூகவலைதளத்தில் அவர் விடியோ பதிவிட்டுள்ளார்.
விடியோவில் அன்ஷிதா தெரிவித்துள்ளதாவது, ''உங்கள் செல்லம்மா அன்ஷிதா பேசுகிறேன். உங்களிடம் ஒரு நல்ல செய்தியைப் பகிர வேண்டும் என விரும்புகிறேன். உங்க வீட்டுப் பொண்ணு அன்ஷிதா என்று என்னை ரசிகர்கள் கூறுகின்றனர். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
என்னைப் பற்றிய தவறான கருத்துகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன். தற்போது அது நடந்துள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பலரும் என்னைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்கின்றனர்.
விஷால் உடன் காதல் என்பதைப் போன்ற கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள்தான்'' விஷாலுடன் நல்ல நட்பு உள்ளதாகப் (இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்) பகிர்ந்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கருத்துகள் அனைத்தையும் படித்ததாகவும், ஒட்டுமொத்தமாக பலரும் அன்பு செலுத்துவதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்ட அன்ஷிதா, மிகவும் நேர்மறையாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி!