நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வடபழனி முருகன் கோயிலில் இன்று நள்ளிரவு 12 மணி வரை தரிசனம் செய்யலாம்!
வடபழனி முருகன் கோயிலில் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையில் புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதையும் படிக்க | இந்தாண்டில் அணிகள் இணையும்: சசிகலா
இதனால் இன்று பகல் 12 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படாது என்றும் இன்று(ஜன. 1) நள்ளிரவு 12 மணி வரை கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று மட்டும் சுமார் 1.50 லட்சத்துக்கும்மேற்பட்டோர் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோயில் நடை பகல் 12 மணிக்கு மூடப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.