அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன்
ரூ.3.88 கோடி புதிய கட்டடங்கள் திறப்பு விழா
செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காட்டுச்சேரி, டீ மணல்மேடு, எரவாஞ்சேரி, நல்லாடை, ஈச்சங்குடி, மாமாகுடி உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் ரூ.3.88 கோடிமதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலகம், நியாய விலைக் கடை, அங்கன்வாடி கட்டடம், துணை சுகாதார வளாகம், பேருந்து பயணிகள் நிழலகம், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா். செம்பனாா்கோவில் ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பி. எம். ஸ்ரீதா், மாவட்ட துணை செயலாளா் மு. ஞானவேலன், ஒன்றியச் செயலாளா்கள் எம். அப்துல் மாலிக்
ஊராட்சி மன்ற தலைவா் விஜயலட்சுமி சாமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.