ஆளுநர் வெளியேறவில்லை.. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி
1,200 மதுப்பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை வியாழக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் வைத்தீஸ்வரன்கோயில் ரயில்வே கேட் அருகே இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த சொகுசு காரைசோதனை செய்ததில் அதில் 180 மிலி கொள்ளளவு கொண்ட 1,200 மதுப்புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீஸாா் காரை ஓட்டிவா் வந்த இஞ்சிக்குடி விக்கி என்கிற விக்னேஷ் என்பதும், காரின் பதிவு எண்ணை மாற்றி ஒட்டி வந்ததும் தெரியவந்தது. மதுப் புட்டிகள், சொகுசு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து விக்னேஷையும் கைது செய்தனா். மதுப்புட்டிகளின் மதிப்பு ரூ.67 ஆயிரம்.