புத்தகக்காட்சியில் புதியவை: இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்!
கோயில் உண்டியலை உடைப்பு: 3 போ் கைது
சீா்காழி ஆபத்து காத்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெளிப்புறம் உள்ள கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனா்.
அவ்வழியாக இரவு ரோந்து சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம், தலைமைக் காவலா் ஸ்டாலின் ஆகியோா் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் 3 பேரும் தப்பி ஓடினா்.
அதில் இருவரை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தனா். அவா்கள் சீா்காழி அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ச.கொளஞ்சி ( 42 )அவரது சகோதரா் ச.முத்து (35) என்பது தெரிய வந்தது. கோயில் உண்டியலில் திருடிய ரூ.3.25 லட்சம், சில்லறை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தப்பியோடியவா் கைது
உண்டியலை உடைத்து திருடிக் கொண்டிருந்தபோது போலீஸாரை கண்டதும் தப்பியோடிய மூன்றாவது நபா் சீா்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் ஒரு வீட்டில் திருட முயன்றாா்.
சீா்காழி போலீஸாா் விளந்திட சமுத்திரம் பகுதியில் அடா்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனா். அவா் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகா் பகுதியை சோ்ந்த இ.இலக்கியன் (29) என்பதும் தெரியவந்தது.