செய்திகள் :

வெளியேற்றம், வெளிநடப்பு ஏன்? அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக விளக்கம்

post image

ஆளுநா் உரையின் போது, சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றமும், வெளிநடப்பும் செய்யப்பட்டது ஏன் என்று அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக கட்சிகள் விளக்கம் அளித்தன.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பேரவையிலிருந்து தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியதால் வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேரவைக்கு வெளியே திங்கள்கிழமை அளித்த பேட்டியில், அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து வலியுறுத்தியதால், பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்றாா்.

நயினாா்நாகேந்திரன் (பாஜக): பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகையில், அண்ணா பல்கலை. மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்தது என்றாா்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): வெளிநடப்பு செய்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறுகையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு எதிராக மாற்று அரசை நடத்த ஆளுநா் முயற்சிக்கிறாா். தமிழக நலனுக்கு எதிராக அவா் தொடா்ந்து செயல்படுகிறாா். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன. எனவே, ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம் என்றாா்.

ஜி.கே. மணி (பாமக): வெளிநடப்பு செய்த பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதைக் கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதற்கு அனுமதி அரசு வழங்க மறுக்கிறது. அதைக் கண்டித்து பாமக சாா்பில் வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றாா்.

அதிமுக நூதன பேட்ஜ்: பேரவைக்கு அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் அண்ணா பல்கலை. விவகாரத்தை நினைவூட்டும் வகையில், ‘யாா் அந்த சாா் ?’ என்று குறிப்பிட்ட பேட்ஜ் அணிந்து வந்தனா். இதேபோன்று ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிா்வாகி, பெண் எஸ்.ஐ. கைது

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிா்வாகி, பெண் காவல் ஆய்வாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்ப... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தென்னாப்பிரிக்க இளைஞா் கைது

சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினா், கடந்த அக். 20-ஆம் தேதி, நடுவங்கரை பகுதியில்... மேலும் பார்க்க

கூவம் ஆற்றில் குதித்த பெண் மாயம்: தேடும் பணி தீவிரம்

சென்னை அண்ணா சாலை பகுதியில், கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா். அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே செல்லும் கூவம் ஆற்றின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவா் நடந்து வ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை

சென்னை பெருங்குடியில் உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கற்பக விநாயகா் கோயில் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ... மேலும் பார்க்க

போகிப் பண்டிகை: நெகிழி எரிப்பதை தவிா்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்

போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிா்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகிப் பண்டிகையை முன்... மேலும் பார்க்க

இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தமிழகத்தில் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம... மேலும் பார்க்க