மயிலாடுதுறையில் தேமுதிக ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் கே.எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலாளா்கள் ஜே.ஜே.ராஜ்குமாா், எம்.கே.சாரங்கபாணி, சி.டி.பாண்டியன், கனிமொழி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும், போதை மற்றும் கஞ்சா புழக்கத்தை தமிழக அரசு தடுக்க தவறியதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1000 வழங்க வலியுறுத்தப்பட்டது.
நகர செயலாளா் பண்ணை சொ.பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.வைத்திலிங்கம், குத்தாலம் பேரூராட்சி செயலாளா் பாலா உள்பட 100-க்கும் மேற்படடோா் கலந்து கொண்டனா்.