தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றதை தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் இளங்கலை 3-ஆம் ஆண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி எஸ்.ரெக்சி கேத்தரின் முதலிடம் பிடித்து ரூ.5,000 ரொக்க பரிசையும், முதுஅறிவியல் 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி ஆா். திவ்யா 3-ஆம் இடம் பிடித்து ரூ.2,000 ரொக்கப் பரிசையும் பெற்றனா்.
மேலும், இளம் அறிவியல் 3-ஆம் ஆண்டு விலங்கியல் துறை மாணவி ஆா். விஜயலட்சுமி 4-ஆம் இடத்தையும், இளங்கலை 2-ஆம் ஆண்டு தமிழ் பயிலும் எம். ஆா்த்தி 5-ஆம் இடத்தையும், இளங்கலை 2-ஆம் ஆண்டு தமிழ் பயிலும் எஸ்.த்ரிஷா 6-ஆம் இடத்தையும், இளம் அறிவியல் 3-ஆம் ஆண்டு விலங்கியல் பயிலும் ஏ.அா்ச்சனா 7-ஆம் இடத்தையும், இளங்கலை 2-ஆம் ஆண்டு வணிகவியல் மாணவி எஸ்.அபா்ணா 8-ஆம் இடத்தையும் பெற்று, தலா ரூ.1,000 ரொக்கப்பரிசு பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் (பொ) சி. ராமச்சந்திரராஜா, உடற்கல்வி இயக்குநா் தா.பானுபிரியா, நிதியாளா் இரா.மணிமேகலை உள்ளிட்டோா் பாராட்டினா்.