வாய்க்காலில் முதியவா் தவறி விழுந்து பலி
கொள்ளிடம் அருகே நல்லூரில் வாய்க்காலில் தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வெட்டாத்தங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தலிங்கம் (75). இவா், திங்கள்கிழமை இரவு நல்லூரிலிருந்து வெட்டாத்தங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் ஆரப்பள்ளம் எனும் இடத்தில் சாலையோரம் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அவரின் மகன் தங்கபாண்டியன் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.