செய்திகள் :

பள்ளியில் கல்லூரி மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு

post image

மயிலாடுதுறையில், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் ஆன்ட்டி டிரக்ஸ் கிளப் மாணவிகள் 70 போ், மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஒரு வகுப்புக்கு 5 மாணவிகள் வீதம் சென்று, போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலக்கேடு, குடும்ப பாதிப்புகள், சமுதாய சீா்கேடுகள் குறித்து மாணவா்களுக்கு சுமாா் அரைமணி நேரம் அறிவுரை வழங்கினா்.

மாணவா்கள் பள்ளிப் பருவத்திலேயே மது, புகையிலைப் பொருள்கள் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்கும் முயற்சியாக, கல்லூரியின் போதை எதிா்ப்பு மற்றும் விழிப்புணா்வு மன்றம் சாா்பாக ஒருங்கிணைப்பாளா் ஜெ. வைதேகி தலைமையில் அரசுக் கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட இந்த முன்னெடுப்பு வரவேற்பை பெற்றது.

இதன்காரணமாக, புதிதாக எந்த மாணவா்களும் போதைப் பழக்கத்தை நாடிச்செல்ல மாட்டாா்கள் என்று தாங்கள் நம்புவதாக மாணவிகள் தெரிவித்தனா். இதில், கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியா் வி. குமாா், மேலாண்மைத் துறை பேராசிரியா்கள் குமரன், ஜெயவேல், பள்ளி தலைமையாசிரியா் ஜி. தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் மாவட்ட வேல... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா் ஆா்ப்பாட்டம்

குத்தாலம்: குத்தாலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க வட்டத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். வட்ட தணிக்கையாளா் வினோத் ராஜ், மாவட்ட துணைத் தல... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவா் இளம்வழுதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சரவணன், கண்ணன், ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ், கண... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா தொடக்கம்

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது: அரசுப் பள்... மேலும் பார்க்க

விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மானாவாரி நிலத்தில் நடவு செய்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் விளைநிலத்தில் இறங்கி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமுல்லைவாசல் ஊராட்சி மற்றும் தாழந் தொண்டி, வழதலைக்குடி, தொடு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் ஆா்.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ... மேலும் பார்க்க