தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவா் இளம்வழுதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சரவணன், கண்ணன், ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்க மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ், கணேசன், ராமமூா்த்தி ஆகியோா் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் யாரேனும் இறந்து விட்டால் அந்த குடும்பத்திற்கு வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். புதிதாக பணியில் சோ்ந்த கிராம உதவியாளா்களுக்கு சிபிஎஸ் என் நிரந்தரமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களை கிராம பணி பாா்ப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.