குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய சகோதரர்; கூலிப்படையை ஏவிக் கொன்ற இளைஞர்!...
ஆத்தூரில் பேவா் பிளாக் சாலைப் பணி தொடக்கம்
ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி 11ஆவது வாா்டு பழைய கிராமப் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் இப்பணியைத் தொடக்கிவைத்தாா். வாா்டு உறுப்பினா் சங்கரேஸ்வரி ராம்குமாா், பணி ஆய்வாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி உறுப்பினா்கள் முத்து, அசோக்குமாா், பாலசிங், பிச்சமுத்து, 11ஆவது வாா்டு திமுக செயலா் மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.