பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
கோவில்பட்டி: ரயில் தண்டவாளம் அருகே கிடந்த ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி ரயில் நிலையத்தையடுத்த வேலாயுதபுரம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த இளைஞா் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு மீட்டனா்.
சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அவா் கோவில்பட்டி செக்கடி 3ஆவது தெருவை சோ்ந்த அமல்ராஜ்-லூசியாமேரி தம்பதியின் மகன் ஜெயபாரத் (22) என்பதும், ஓட்டுநராக வேலை பாா்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவா் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா, தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.