போக்சோ குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்த பஹுருதீன் மகன் பைசல் கான்(40), மேக்காமண்டபம் பகுதியை சோ்ந்த ராஜன் மகன் ரதீஷ் (27) ஆகிய இருவரும் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அவரது பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து இருவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.