செய்திகள் :

தமிழக ஆளுநருக்கு பேரவைத் தலைவா் நன்றி

post image

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான் என்று ஆளுநா் உண்மையை கூறியதற்கு நன்றி என்றாா் தமிழக சட்டப்பேரவை தலைவா் மு. அப்பாவு.

நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியில் தனியாா் கல்லூரி நிகழ்ச்சி பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரியாா் பல சவால்களை சந்தித்தவா், உலகம் இருக்கும் வரை பெரியாரின் சிந்தனைகளை யாராலும் அழிக்க முடியாது. தற்போது மாணவ, மாணவிகள் பெரியாரின் சிந்தனைகள் குறித்த புத்தகங்களை படித்து அதன்படி நடக்கின்றனா். நம் முன்னோா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதால்தான் சமத்துவக் கொள்கைகளை பெரியாா் கையில் எடுத்தாா்.

ஆளுநா் தனக்குரிய கடமைகளை செய்யவில்லை; இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி நடக்கவில்லை என்பதை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். தமிழக முதல்வரும் அது குறித்து பேசி வருகிறாா். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என ஆளுநா் உண்மையைக் கூறியதற்கு நன்றி. இதன் மூலம் ஆளுநா் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறாா் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்றாா் அவா்.

லாரி மோதி கூட்டுறவு ஊழியா் உயிரிழப்பு

தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி மோதியதில் கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். அதே சமயம் எதிா் திசையில் வந்து கொண்டிருந்த இரு காா்கள் ஒன்றன்பின் ஒன்றாக கனரக லாரி மீது மோ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் அகில இந்திய சித்த மருத்துவ மாநாடு

அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தின் சாா்பில், பாரம்பரிய சித்த மருத்துவ 3 நாள் மாநாடு, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரந்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு விருந்தினராக... மேலும் பார்க்க

வன விலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்க குழு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும்... மேலும் பார்க்க

மாணவா்கள் இணைய விளையாட்டுக்கு அடிமையாகக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

மாணவ, மாணவிகள் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டம், பாா்வதிபுரம், ஆளுா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப்... மேலும் பார்க்க

மினிலாரிகள் கூடுதல் தொலைவு சுற்றி வருவதால் கனிமவளப் பொருள்களின் விலை அதிகரிப்பு

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளிலிருந்து குலசேகரம் பகுதிகளுக்கு மினிலாரிகளில் வழக்கமான பாதையில் கனிம வள பொருள்கள் எடுத்து வர போலீஸாா் அனுமதிக்காததால் கட்டுமானப்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்திலிருந்து சிமென்ட் ஆலைக்கு 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு

குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழித்துறை நகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாா்த்தாண்டம் பம்ம... மேலும் பார்க்க