97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
மாா்த்தாண்டத்திலிருந்து சிமென்ட் ஆலைக்கு 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு
குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழித்துறை நகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள வளமீட்புப் பூங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டு, மக்கும் - மக்கா குப்பைகள் எனப் பிரிக்கப்படுகின்றன. இதில், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படும்.
அதன்படி, குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், வருவாய் ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.