செய்திகள் :

Career: டேராடூன் மிலிட்டரி பள்ளியில் மாணவர் சேர்க்கை; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

post image

டேராடூனிலுள்ள இராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ்-ல் மாணவ - மாணவிகளுக்குக் கல்வி வாய்ப்பு.

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ் என்பது பள்ளிக்கூடம் ஆகும். இங்கே 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இந்தப் பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மாணவர்கள் பலர் இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். ஆக, உங்கள் பிள்ளைகளுக்குக்கூட இந்த சூப்பரான வாய்ப்பு கிடைக்கலாம்.

என்ன வாய்ப்பு?

இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

வயது வரம்பு: 11 1/2 - 13.

தகுதி: ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

எங்கே தேர்வு?

தமிழ்நாட்டில் சென்னை.

எப்போது தேர்வு?

ஜூன் 1, 2025.

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

டேராடூனிலுள்ள இராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ்
டேராடூனிலுள்ள இராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ்

எழுத்துத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, நேர்காணல் தேதி அறிவிக்கப்படும்.

தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றிருக்கும்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

www.rimc.gov.in என்கிற இணையதளத்தில் கட்டணம் செலுத்தினால், விண்ணப்பம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

திருவாரூர்: ``புத்தகமே என்னை உயர்த்தியது..'' -மாணவர்களுடன் தரையில் அமர்ந்து படித்த ஆட்சியர்!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே, 3-வது புத்தக திருவிழா நாளை தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ’திருவாரூர் வாசிக்கிறது’ என்ற விழ்ப்புணர்வு நிகழ்ச்சி நேற்று அனைத்து பள்ளி மற்... மேலும் பார்க்க

கரூர்: QR Code வழியாக மாணவர்களுக்குத் திருக்குறள்; அரசுப் பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி!

காலத்தைக் கடந்தும் உலக மக்கள் அனைவருக்குமான கருத்துகளைத் தாங்கி நிற்கும் நூலாக மிளிர்கிறது திருக்குறள்.ஓலைச்சுவடி, புத்தகம் என்று காலத்துக்கு ஏற்ப பல வடிவங்களில் அந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வந்த நிலைய... மேலும் பார்க்க

அரசு பள்ளி விவகாரம்; 'தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை'- அன்பில் மகேஸ் சொல்வதென்ன?

தமிழக அரசின் கீழ் இயங்கும் 500 பள்ளிகளை தனியாருக்கு அரசு ஒப்படைக்கப் போவதாக செய்திகள் சமீபத்தில் பரவின.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன... மேலும் பார்க்க

`எனக்கு ஓர் கனவு இருக்கிறது' முகாம்: கலை பயிற்சி `டு' குறும்படம் தயாரிப்பு - அசத்திய மாணவர்கள்!

கடந்த டிசம்பர் 26 அன்று தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளும் இணைந்து “எனக்கு ஓர் கனவு இருக்கிறது” என்னும் தலைப்பில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயி... மேலும் பார்க்க

மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவின் முதல் சர்வதேச கருத்தரங்கு!

இன்டாக்ஸ் 2024 (INTOX 2024) என்ற பெயரில் மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்ப... மேலும் பார்க்க