செய்திகள் :

`எனக்கு ஓர் கனவு இருக்கிறது' முகாம்: கலை பயிற்சி `டு' குறும்படம் தயாரிப்பு - அசத்திய மாணவர்கள்!

post image

கடந்த டிசம்பர் 26 அன்று தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளும் இணைந்து “எனக்கு ஓர் கனவு இருக்கிறது” என்னும் தலைப்பில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஒரு பயிற்சி முகாம் நடத்தின.

இந்த முகாமில் 30 பள்ளிகளில் இருந்து 13-15 வயதுடைய மாணவர்கள் சுமார் 350 பேர் கலந்துகொண்டனர். ஐந்து நாட்கள் நடந்த இந்த முகாமில் சிலம்பம், பறை, நாட்டுப்புறக் கலைகள், தெருக்கூத்து போன்ற 15 கலைகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. ரோபாட்டிக்ஸ் குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

டிசம்பர் 30 அன்று சென்னை, அன்னனூரில் நடந்த இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம்.

அவ்வளவு பெரிய மைதானத்தில் மாண்வர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கான கலைகளை பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.

“ஐந்து நாள்கள் முகாம். லீவ் டைம்மில் எதுக்கு இந்த கேம்ப்னு ரொம்ப சலிச்சிக்கிட்டுத்தான் வந்தோம். ஆனால், இங்க வந்து இவங்க கத்துக்கொடுக்கிறத பார்த்த உடனே எங்களுக்கு இருந்த அந்த எண்ணமே மாறிடுச்சு. இங்க வந்தப்போ எனக்கு கதையே தெரியாது இங்க வந்ததுக்கு அப்புறம்... நெறைய கதைகள் தெரிஞ்சுகிட்டேன். அது மட்டுமல்லாம நானே கதை எழுத ஆரம்பிச்சுட்டேன்.” என்றார் மாணவர் ஒருவர்... இல்லை, இல்லை இதை சொன்னது ஓர் இளம் கதாசிரியர்.

இதைத்தவிர பயிற்சி நாள்களில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய கலைப்பொருள்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

மாணவர்களின் பயிற்சியையும் படைப்புகளையும் பார்த்து ரசித்த எங்களை, மேலும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது ஒரு செய்தி.

முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் தாங்களே எழுதி, இயக்கி, நடித்து ஒரு குறும்படத்தையே தயார்செய்துவிட்டனர்.

நம்மிடம் பேசிய அந்தப் படத்தின் இயக்குநர், ``படம் எடுக்குறதுனா என்னன்னே எங்களுக்குத் தெரியாது. முதல் 3 நாள்கள் இவங்க சொல்லிக்கொடுத்த விஷயங்களை வைத்தே ஒரு குறும்படத்தை முடித்து விட்டோம். அதுமட்டுமல்லாம, எங்களுக்குள்ளயே கேமராமேன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், நடிகர்கள்'ன்னு நாங்களே வேலைகளைப் பிரிச்சுக்கிட்டோம். இப்போ படத்தை முழுசா முடிச்சுட்டோம்” என்று பேட்டியளித்தார் அந்த நாளைய இயக்குநர்.

நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா IAS, சுதன் IAS ( ஓய்வு) உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஷ்வரி IAS ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டு பாராட்டினர்.

இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளோடு முகாம் முடிவடைந்தது.

அரசு பள்ளி விவகாரம்; 'தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை'- அன்பில் மகேஸ் சொல்வதென்ன?

தமிழக அரசின் கீழ் இயங்கும் 500 பள்ளிகளை தனியாருக்கு அரசு ஒப்படைக்கப் போவதாக செய்திகள் சமீபத்தில் பரவின.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன... மேலும் பார்க்க

மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவின் முதல் சர்வதேச கருத்தரங்கு!

இன்டாக்ஸ் 2024 (INTOX 2024) என்ற பெயரில் மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்ப... மேலும் பார்க்க

``+2 மாணவர்களே... வழக்கறிஞர் ஆக வேண்டுமா?" - நீங்கள் செய்ய வேண்டியது...

மருத்துவம், இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளின் மீது எந்த அளவுக்கு மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளதோ, அதே அளவுக்கான ஆர்வம் சட்டப்படிப்பின் மீதும் உள்ளது. இப்படி மாணவர்கள் இந்தப் படிப்பை விரும்புவதற்கு சமூக ம... மேலும் பார்க்க

'12-ம் வகுப்பு மாணவர்களே... எதிர்காலத்தில் கப்பல் வேலையில் சேர வேண்டுமா?!'

"./1m01'வேலைவாய்ப்புகள் இல்லை...இல்லை' என்று புலம்பிக்கொண்டிருக்காமல், 'கொஞ்சம் மாற்றி யோசித்து' வேலைவாய்ப்பு அதிகம் உள்ள...ஆனால், மாணவர்கள் குறைவாக சேர்ந்து படிக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் நமக்... மேலும் பார்க்க

கரூர்: பனை ஓலைகளில் 1300 குறள்கள்; நவீன திருவள்ளுவர்களாக மாறிய அரசுப் பள்ளி மாணவர்கள்!

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள், பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இரண்டடியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு குறளும் நாடு, மொழி... மேலும் பார்க்க