செய்திகள் :

வேங்கைவயல்: "தமிழக அரசு கூறுவது சரியல்ல; சிபிஐ-க்கு மாற்றுங்கள்" - சிபிஎம் பெ.சண்முகம் வலியுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்கத் தொட்டியில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு, குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற அழுத்தமும் ஆளும் தி.மு.க அரசுக்கு ஏற்பட்டது.

வேங்கைவயல்
வேங்கைவயல்

ஆனால், சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனாலேயே, தி.மு.க அரசு மீது கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. மறுபக்கம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தும் வந்தனர். இத்தகைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது.

விசாரணையில், ``சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்தின் தலைவர் பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தைப் பணி நீக்கம் செய்ததற்குப் பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலைப் பரப்பினார். அதன்பின், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டனர்" என்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வழக்கை முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே காரணம் கூறுவது சரியல்ல என்று தமிழக அரசை விமர்சித்து, வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்த அறிக்கையில், "சி.பி.சி.ஐ.டி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரைப் பழிவாங்க வேண்டுமென்பதற்காகத் தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்குக் காரணம் என்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது." என்று பெ. சண்முகம் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு - தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான விடுமுறை தினங்களை அதிகப்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை தற்போது திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு... மேலும் பார்க்க

``கொஞ்ச நஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே..." - வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணை... மேலும் பார்க்க

BJP: வெளியான மாவட்டத் தலைவர்கள் பட்டியல்; கொதிக்கும் சீனியர்கள்; சர்ச்சையில் தமிழக பாஜக!

கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. மு... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம்.." - வழக்கை CBI-க்கு மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. சம்பவம் நடந்து கிட்டதட்ட ... மேலும் பார்க்க

"Seemanக்கு கட்சி நடத்தும் தகுதியில்ல" - NTKவில் இருந்து விலகியவர்கள் ஆவேசம்

சீமான் மீது அதிருப்தியிலிருந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் இன்று தி.மு.க-வில் இணைந்தனர். கட்சியிலிருந்து விலகியது ஏன் என தி.மு.க-வில் இணைந்தவர்கள் கூறும் கருத்துகள் இங்கே. மேலும் பார்க்க