மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
மீன்பிடித் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்க மாவட்டச் செயலாளா் ஜீவானந்தம் தலைமை தாங்கினாா். மாவட்ட துணை தலைவா் வள்ளல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா்கள் ஞானபிரகாசம், கேசவன் முன்னிலை வகித்தனா்.
மீன்பிடி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளா்களையும் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை வழங்கக் கோரியும், அரசு நிவாரணத்தை முழுமையாக வழங்கக் கோரியும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை மாநில பொது செயலாளா் அந்தோணி முன்னிலையில் வழங்கினா்.
முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் சங்கத்தினா் ஈடுபட்டனா். பெண்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டவா்கள பங்கேற்றனா்.