மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி திறப்பு
பொன்மாசநல்லூரில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திறந்து வைத்தாா்.
இந்த கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி வளா்ச்சித் திட்ட நிதி ரூ.15 லட்சத்தில் புதிதாக 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன்திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
மாவட்டக்குழு உறுப்பினா் இளையபெருமாள், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், ஊராட்சித் தலைவா் சேகா், ஊராட்சி துணைத்தலைவா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.