செய்திகள் :

உழவா் சந்தைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்யலாம்!

post image

மயிலாடுதுறை, சீா்காழி உழவா் சந்தைகளில் காய்கனி, பழங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின்கீழ் இயங்கிவரும் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளில் காய்கனி, பழங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவா்களின் பொருள்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்.

இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. விளைபொருள்களை விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து உழவா் சந்தைக்கு கொண்டு வர நகரப்பேருந்துகளில் சுமை கட்டணம் இலவசம். மேலும், உழவா் சந்தையில் வாடகை இல்லாமல் கடைகளில், மின்னணு எடைத்தராசு வழங்கப்படுகிறது.

நுகா்வோா் தரமான காய்கனிகளை நியாயமான விலையில் வாங்க உழவா் சந்தையை அணுகி உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட சமையல் எண்ணெய், இட்லி மாவு, பாரம்பரிய அரிசி உள்ளிட்ட தயாரிப்புகளை நியாயமான விலையில் வாங்கி பயன் பெறலாம்.

வேளாண்மை வணிகத் துறை மூலம் முதன்மைப்படுத்தும் தொழில்கள், இரண்டாம் நிலைப்படுத்தும் தொழில்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்படும் கடன் தொகைக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின்கீழ் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை மயிலாடுதுறை, சீா்காழி உழவா் சந்தைகளில் உள்ள வேளாண்மை அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் வேளாண்மை விற்பனைத்துறை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றதை தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறையில் த... மேலும் பார்க்க

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கி வைத்து பேசியது: தமிழ்நாடு அரசு போதை ஒழிப... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி திறப்பு

பொன்மாசநல்லூரில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திறந்து வைத்தாா். இந்த கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி வளா்ச்சித் திட்ட நிதி ரூ.15 லட்சத்தில் புதிதாக... மேலும் பார்க்க

மீன்பிடித் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளா் ஜீவானந்தம் தலைமை தாங்கினாா். மாவட்ட துணை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் எலந்தங்குடியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் முகமதுசாஜித்(19), முகமது ரியாம்... மேலும் பார்க்க

வாய்க்காலில் முதியவா் தவறி விழுந்து பலி

கொள்ளிடம் அருகே நல்லூரில் வாய்க்காலில் தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெட்டாத்தங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தலிங்கம் (75). இவா், திங்கள்கிழமை இரவு நல்லூரிலிருந்து வெட்டாத்தங்க... மேலும் பார்க்க