175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
அதிமுக உறுப்பினா்கள் வெளியேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றாமல் ஆளுநா் வெளியேறிய பிறகு, பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினா்கள் கடுமையாக கோஷங்களை எழுப்பினா்.
இதையடுத்து, பேரவையை நடத்தும் பொறுப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்றாா். பொதுவாக ஆளுநா் உரையின்போது, பேரவைத் தலைவா் அவையை நடத்தும் வழக்கம் இல்லை. பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியதால் அவரது இருக்கையில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு அமா்ந்தாா்.
அப்போது, கடுமையாகக் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றும்படி அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு உத்தரவிட்டாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனா்.
காங்கிரஸ்-பாமக வெளிநடப்பு: பேரவையில் கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ், பாமக உறுப்பினா்களும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, பேரவையில் அமைதி திரும்பியது.