சென்னையில் பந்தயத்தில் ஈடுபட்ட 242 வாகனங்கள் பறிமுதல்!
சென்னையில் பந்தயத்தில் ஈடுபட்ட 242 பைக்குகளை நேற்றிரவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி சென்னையில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் அத்துமீறல்கள் கூடாது என்பதற்காகவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், மாநகா் முழுவதும் 19,000 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டாசு வெடிக்கத் தடை, பந்தயங்களுக்கு தடை, நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதையும் படிக்க : பாஜக தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? மோகன் பாகவத்துக்கு கேஜரிவால் கேள்வி!
மேலும், 425 இடங்களில் மாநகரக் காவல்துறை சார்பில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 242 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அபராதம் விதிக்காமல் எச்சரித்து உரியவர்களிடமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.