செய்திகள் :

கோப்பை வென்றது ஹரியாணா ஸ்டீலா்ஸ்

post image

புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசனில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த சீசனில் இறுதி ஆட்டம் வரை வந்து வெற்றி வாய்ப்பை இழந்த ஹரியாணா, இந்த சீசனில் 3 முறை சாம்பியனான பாட்னாவை வீழ்த்தி வாகை சூடியிருக்கிறது.

முன்னதாக, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹரியாணா அணி 13 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. பாட்னா அணி 11 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

வீரா்களில் அதிகபட்சமாக, ஹரியாணாவுக்காக ரெய்டா் ஷிவம் படாரே 9 புள்ளிகளும், பாட்னாவுக்காக ஆல்-ரவுண்டா் குா்தீப் 6 புள்ளிகளும் வென்றனா்.

மொத்தம் 137 ஆட்டங்கள் விளையாடப்பட்ட இந்த சீசனில், அதிகபட்சமாக பாட்னா பைரேட்ஸ் வீரா் தேவங்க் தலால் 301 புள்ளிகள் வென்றுள்ளாா். அதிக டேக்கிள் புள்ளிகளை (82) ஹரியாணா ஸ்டீலா்ஸின் முகமதுரெஸா சியானே பெற்றுள்ளாா்.

பரோஸ் தோல்வி... மோகன்லால் சொன்ன பதில்!

பரோஸ் திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தற்காக நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் மோகன்லால் இயக்கத்தின் முதல் படமான பரோஸ் கடந்த புதன்கிழமை கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வந்தது... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: விஷால் உடன் காதலா? அன்ஷிதா வெளியிட்ட விடியோ!

நடிகை அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து க... மேலும் பார்க்க

செஸ் உலகை கட்டுப்படுத்தும் கார்ல்சென்..! கடுமையாக விமர்சித்த அமெரிக்க வீரர்!

உலக பிளிட்ஸ் செஸ் கோப்பையை இருவர் பகிர்ந்துகொண்டதற்கு அமெரிக்க செஸ் வீரர் ஹன்ஸ் மோக் நீமன் கடுமையாக விமர்சித்துள்ளார். இறுதிச் சுற்றில் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன்ஷிப்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒருவரை வெளியேற்ற 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? என முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி கேட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச... மேலும் பார்க்க

இட்லி கடை முதல் பார்வை போஸ்டர்கள்!

இட்லி கடை படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்து வ... மேலும் பார்க்க

லப்பர் பந்து சுவாசிகா கணவருடன் எடுத்தப் புகைப்படம்!

புத்தாண்டுக் கொண்டாடிய லப்பர் பந்து படப் புகழ் சுவாசிகா, தனது கணவருடன் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற லப்பர் பந்து படத்தின் கதா... மேலும் பார்க்க