லப்பர் பந்து சுவாசிகா கணவருடன் எடுத்தப் புகைப்படம்!
புத்தாண்டுக் கொண்டாடிய லப்பர் பந்து படப் புகழ் சுவாசிகா, தனது கணவருடன் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற லப்பர் பந்து படத்தின் கதாநாயகன், கதாநாயகியை விடவும் அதிகம் பேசப்பட்டவர் சுவாசிகா.
அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்து, ஒட்டுமொத்த படத்தின் உயிர்த்துடிப்பான மாறிப்போயிருந்தார் சுவாசிகா.
எங்கிருந்தாங்க டா இவ்வளவு நாளா என்பது போல, இந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் சுவாசிகாவின் தத்ரூப நடிப்பு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் சுவாசிகா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் பிரேம் ஜேக்கப் என்ற நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டவர்.
ஒன்றாக மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் இருவரும் நடித்தபோது, நட்பாகி அது காதலாக மலர்ந்து, பிறகு திருமணத்தில் முடிந்தது. இருவரும் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், கோவையில் உள்ள ஆதியோகி சிலைக்கு முன் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.