6 ஆண்டுகளாக பாலியல் குற்றங்களுக்கு பிரிட்டன் பிரதமர் உடந்தை: எலான் மஸ்க் குற்றச்...
இட்லி கடை முதல் பார்வை போஸ்டர்கள்!
இட்லி கடை படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதில், இட்லி கடை படத்தை அவரே இயக்குவதால் படப்பிடிப்பு தென்காசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: பாங்காக்கில் கூலி படப்பிடிப்பு?
படம் அடுத்தாண்டு ஏப்.10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இப்படத்தின் 2 முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.