செய்திகள் :

Nesippaya: "இளையராஜாவின் குணம்.. நா.முத்துக்குமார் காம்போ.." - யுவன் குறித்து சிவகார்த்திகேயன்

post image
'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேசிப்பாயா'. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது.

nesippaya
nesippaya

அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார். இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "யுவன் சங்கர் ராஜா சாரைப் பொறுத்தவரையில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. தனக்கு இந்த படத்தின் கதை பிடித்துள்ளது. அந்தக் கதைக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்.

The Greatest of All Time

இந்த குணம் அவரது அப்பா இளையராஜா சாரிடம் இருந்து வந்திருக்கும் என நினைக்கின்றேன். யுவன் சாரின் மொத்த கரியரையும் எடுத்துப் பார்த்தால் எல்லா படங்களையும் ஒரே மாதிரிதான் கையாண்டிருக்கிறார். அதனால்தான் அவர் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதைக் கடந்து அவரை பியாண்ட் டைம் என்றுதான் கூறவேண்டும். ஒருநாள் இரவு காரில் வந்து கொண்டு இருந்தபோது யுவன் சாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

sivakarthikeyan
sivakarthikeyan

நா. முத்துகுமார் சார்...

ரொம்பவும் எமோஷனல் ஆகிவிட்டேன். உடனே அவருக்கு போன் செய்து, சார் உங்களையும் நா.முத்துகுமார் சார் காமினேஷனையும் ரொம்பவே மிஸ் செய்கின்றேன் சார் எனக் கூறினேன். யுவன் சாரின் பாடல்களைத்தான் அதிகம் எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கேட்டுள்ளேன். அவரது ஒரு பாடலைக் கேட்டால், உடனே எனது கல்லூரி நினைவுகள், கல்லூரியில் நான் செய்த செயல்கள்தான் நினைவுக்கு வரும்" என்று யுவன் சங்கர் ராஜா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மாணவி வன்கொடுமை வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கணும்..." - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

'அமரன்' பட ஹிட்டிற்கு பிறகுச் சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு... மேலும் பார்க்க

Madha Gaja Raja: "அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து" - விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டத் திரைப்படம் `மதகஜராஜா'.ஜ... மேலும் பார்க்க

``அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B', `உள்ளம் கேட்குமே', `உன்னாலே உன்னாலே', போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ... மேலும் பார்க்க