கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
பொன்மலா்பாளையத்தில் வைத்தீஸ்வரன் கோயிலில் சங்காபிஷேகம்
பரமத்தி வேலூா் தாலுகாவில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி மாத சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்மலா்பாளையம் அக்ராஹரத்தில் உள்ள தையல்நாயகி உடனாகிய வைத்தீஸ்வரன் கோயிலில் 365 சங்குகளால் வைத்தியநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. 365 சங்குகளால் அம்மையப்பா் அலங்காரம் செய்யப்பட்டு,கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றன.
மூலவா் வைத்தியநாதருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் உள்ளிட்ட சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.