சாலை விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தூய்மைப் பணியாளா் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பராயன் மகன் மணி(57), தூய்மைப் பணியாளா். இவா் கடந்த டிச. 25-ஆம் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனப்பட்டு தபால் குட்டை அருகே மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த காா்-மொபெட் ம்மீது மோதி விபத்து நேரிட்டதில் பலத்த காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மணியின் உறவினரான க.ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.