செய்திகள் :

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் நேரடி மோதல் !

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதை அடுத்து பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

கட்சியின் தலைவரும், முன் னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர். ச.ராமதாஸ். கெளரவத் தலைவர். ஜி.கே. மணி வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு தொடக்கமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் -க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் வளர்ச்சி , எதிர்கால செயல்பாடுகள் குறித்து ராமதாஸ் பேசினார்.

பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணி தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கி எறிந்தார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க|மன்மோகனின் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா-அமெரிக்க நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்

இதையடுத்து மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கிய வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான்தான் முடிவு எடுப்போன்.

நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையில் அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.

இதனைத்தொடர்ந்து பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என அன்புமணி தொண்டர்களிடையே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் தந்தை-மகனுக்கிடையே(நிறுவனத் தலைவர்-தலைவர்) நடந்து வந்த பனிப்போர் இன்று பகிரங்கமாக வெடித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பனிப்போரால் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேடையில் இருந்து இறங்கிய அன்புமணியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது ராமதாஸ் காரை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல்!வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இரு வேறு நடவடிக்கைகளில் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டி... மேலும் பார்க்க

’ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கையால் 4 பேர் தற்கொலை!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!

புதுதில்லியில் நம்கீன் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கார் பகுதியில் நம்கீன் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு அடுக்கு உணவுத் த... மேலும் பார்க்க

தமிழகமும் சதுரங்கமும் - சதுரங்க வல்லபநாதர் முதல் குகேஷ் வரை..!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வய... மேலும் பார்க்க