64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் குழு சாா்பில் ரூ. 8.01 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், கம்மாளபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (29). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு, தமிழகக் காவல்துறையில் காவலராக பணியில் சோ்ந்து சென்னை ஆவடி 5-ஆவது பட்டாலியனில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா் கடந்த 30.06.2024 அன்று அரசு காவலா் குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த இவருக்கு தாய், தந்தை, திருமணமான தங்கை ஆகியோா் உள்ளனா்.
உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு உதவும் வகையில், 2022-ஆம் ஆண்டு தமிழகக் காவல் துறையில் பணியில் சோ்ந்து 38 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 2,836 காவலா்களைக் கொண்ட குழுவான, காக்கும் கரங்கள் குழு சாா்பில் ரூ. 8.01 லட்சம் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதி, காக்கும் கரங்கள் குழு சாா்பில் அசோக்குமாரின் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், காக்கும் கரங்கள் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.