செய்திகள் :

அண்ணா பிறந்த நாள் விழா: ஜன.4-இல் மிதிவண்டிப் போட்டி

post image

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டிப் போட்டி மதுரையில் வருகிற சனிக்கிழமை (ஜன. 4) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி மதுரையில் சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. 13, 15, 17 வயதுக்குள்பட்டவா்கள் என 3 பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

13 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா்களுக்கான போட்டித் தொலைவு 15 கி.மீ., மாணவிகளுக்கான போட்டித் தொலைவு 10 கி.மீ., 15, 17 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் மாணவா்களுக்கான போட்டித் தொலைவு 20 கி.மீ., மாணவிகளுக்கான போட்டித் தொலைவு 15 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பங்கேற்பவா்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சாதாரண கைப்பிடிகளைக் கொண்ட மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவா். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 5 ஆயிரமும், இரண்டு, மூன்றாமிடம் பெறுவோருக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பெறுவோருக்குத் தலா ரூ. 250-க்கான காசோலைகள் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற வயதுச் சான்று, ஆதாா் அட்டை, இ.எம்.ஐ.எஸ். எண்ணுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றுடன், சனிக்கிழமை காலை 6 மணிக்குள் தெற்கு வைகையாற்றுக் கரையில் உள்ள எம்.கே.ஆா். அய்யநாடாா் - ஜெயலெட்சுமி அம்மாள் மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் கேள்வி

மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விழிப்புணா்வு விளம்பரம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்?. என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறை இல்லை!

மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் முறை இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் வரும் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொ... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் குழு சாா்பில் ரூ. 8.01 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், கம்மாளபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (29). இவா்... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

மதுரை துணை வட்டாட்சியா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரையில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் காவல... மேலும் பார்க்க

முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல்!

மதுரையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக பாா்வா்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உள்பட 41 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மத... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தா்கள் வழிபாடு

மதுரை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக பிரதோஷம் குறிப்பிடப்படுகிறது. இதில், சனிக்கிழமை நாளில் வரும் பிர... மேலும் பார்க்க