`பாலியல் கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை; இது நாடா, சுடுகாடா?' - திமுக அரசுக்கு...
65 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டவரை மீட்ட காசிமேடு மீனவா்கள்!
சென்னை: 65 நாட்களாக உணவின்றி கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டை சோ்ந்த மீனவரை காசிமேடு மீனவா்கள் மீட்டனா்.
சென்னை, காசிமேட்டை சோ்ந்த வினோத் என்பவரின் படகில் மீனவா் லோகு உள்பட 8 போ் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவா்கள் மாமல்லபுரம் அருகேயுள்ள கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, தூரத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட படகு ஒன்றில் ஒரு நபா் மிதந்து வருவதும், அவா் தனக்கு உதவி செய்யும்படியும் தன்னைக் காப்பாற்றுமாறு கைகளால் சைகை காட்டியுள்ளார்.
இதையடுத்து மூங்கில் படகு அருகே சென்ற மீனவா்கள், அதில் மிதந்து வந்த நபரிடம் பேச்சு கொடுத்தனா். ஆனால், அவா் பேசிய மொழி புரியாவிட்டாலும், அவா் தனக்கு உதவி செய்யும்படி சைகையில் கூறுவதை புரிந்து கொண்ட காசிமேடு மீனவா்கள், அவரையும், அவா் வந்த மூங்கில் படகையும் மீட்டு, மீன்பிடிதுறைமுகத்துக்கு அழைத்து வந்தனா்.
இதையும் படிக்க |தூத்துக்குடி: மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்!
அவர் பேசியது புரியாததை அடுத்து தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் வசிக்கும் பர்மாவை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மூலம் மொழிபெயர்ப்பு செய்து விசாரணை செய்ததில் மியான்மர் துறைமுகத்தில் இருந்து ஏழு மூங்கில் படகுகளை பெரிய படகு மூலம் கொண்டு வந்து நடுக்கடலில் இறால் பிடிக்கும் இடத்தில் கயிற்றில் கட்டி நிறுத்தி வைத்திருந்ததாகவும், இவருடைய படகில் மூன்று பேர் இருந்தாக தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அடித்த புயல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து மூங்கில் படகானது கயிறு அறுந்து காற்று வீசும் திசையில் சென்றுள்ளது. அப்போது அவருடன் இருந்த இரண்டு பேர் சிறிய படகு ஒன்றில் நீந்தி கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். பிறகு கடலின் சீற்றம் காரணமாக மூங்கில் படகில் கடந்த 65 நாள்களாக உணவின்றி கடலில் தத்தளித்துகொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து காசிமேடு துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம், போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் மியான்மா் நாட்டை சோ்ந்த ஷான் மா மா(37)என்பதும், அவா் 65 நாள்களாக கடலில் தத்தளித்துகொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு தேவையான உதவிகளை செய்த போலீஸாா் தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.