செய்திகள் :

RSSக்கு கெஜ்ரிவால் கடிதம்... கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்... டெல்லியில் நடக்கும் கடித விளையாட்டு!

post image

டெல்லியில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. பிப்ரவரியில் அல்லது அதற்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலுக்கு ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் வேளைகளில் இறங்கிவிட்டன.

கெஜ்ரிவால்

இந்தியா கூட்டணியிலிருந்தாலும் தனித்துக் களமிறங்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இப்போதே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருப்பது பா.ஜ.க-விடமிருந்து எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.

மோகன் பகவத்

அந்தக் கடிதத்தில் கெஜ்ரிவால், ``டெல்லி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆர்.எஸ்.எஸ் வாக்கு சேகரிக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே அது உண்மையா? சமீப காலங்களில் பா.ஜ.க செய்த தவறுகளை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறதா என்பதை உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா செய்து ஓட்டுகளை வாங்குகின்றனர். ஆர்.எஸ்.எஸ் இதை ஆதரிக்கிறதா? பூர்வாஞ்சல் பகுதி ஏழைகள், தலித்துகள் பல ஆண்டுகளாக இங்கு வசித்துவந்த போதிலும், வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கப் பெரிய அளவில் முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்வது இந்திய ஜனநாயகத்துக்குச் சரியானது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா?" என்று மோகன் பகவத்திடம் கேள்விகளை அடுக்கினார்.

இதைத் தொடர்ந்து, டெல்லி பா.ஜ.க மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா, கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``கெஜ்ரிவால் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு எங்களின் கேள்விகளைப் படிக்க வேண்டும். புதுவருடத்தில் பொய் சொல்வதை கெஜ்ரிவால் நிறுத்திவிடுவார் என டெல்லி மக்கள் நம்புகின்றனர்.

பாஜக

எனவே, தேச விரோத சக்திகளின் நன்கொடைகளை ஏற்க மாட்டோம், டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம் என இந்தப் புதுவருடத்தில் கெஜ்ரிவால் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்." என்று வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிய... மேலும் பார்க்க

திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்!

திமுக கூட்டணி கட்சிகளின் கருத்துகள்!தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. சமீபகாலமாக திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் ... மேலும் பார்க்க

Seeman: `சீமான் Vs வருண்குமார் ஐ.பி.எஸ்' - மோதல் முழு விவரம்

கடந்த ஜூலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் களம் கண்ட நா.த.க வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசா... மேலும் பார்க்க

வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே இது தொடர்பாக சென்னையில் வழக்க... மேலும் பார்க்க

`குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்' - அண்ணா பல்கலை., சம்பவம் குறித்து ஜோதிமணி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரல் கொடுக்க வேண்டியது அனைவரது கடமை. பாலியல் விவகாரம் த... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..' - திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக... மேலும் பார்க்க