செய்திகள் :

அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..' - திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

post image

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.கா-வின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டில் கட்சியின் தொடர் களப்பணிகளின் ஒரு பகுதியாக இன்று உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலமாக தொடங்கி வைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். வரும் 2026- ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்தக்கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. ’ஒத்தக்கருத்து’ என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான். தி.மு.க அரசின் அவலங்களைக் கண்டித்து ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலைகூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

gk vasan

இது போன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு மிக முக்கிய காரணம் மதுபானக் கடைகள்தான். மதுபானக் கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், தற்போது எஃப்.எல் - 2 எனப்படக்கூடிய மனமகிழ் மன்றங்களை, மதுபானக்கூடங்களை திறப்பதை நிறுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். புயல், கனமழையால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்” என்றார்.

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புர... மேலும் பார்க்க

புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்தி... மேலும் பார்க்க

`கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமையைச் சிதைக்கும்..!' - முரசொலி காட்டம்; திமுக கூட்டணியில் சலசலப்பா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இம்மாநாட்டில் பேசிய சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம... மேலும் பார்க்க

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீ... மேலும் பார்க்க