தில்லி பனிமூட்டம்: 100 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
தில்லியில் பனிமூட்டத்தால் நிலவும் மோசமான வானிலை காரணமாக 100- க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கடந்த 3 நாள்களாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஒரு நாளில் கிட்டத்தட்ட 1,300 விமானங்களைக் கையாளுகிறது.
இதையும் படிக்க | பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 160 விமானங்கள் வரை தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிமூட்டம் இருந்தாலும் விமானப் போக்குவரத்து எதுவும் திருப்பிவிடப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வேறு விமானங்களில் பயணிக்க விருப்பமிருந்தால் அதற்கான தளங்களில் தேடுமாறு பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
தில்லியில் விமானங்கள் மட்டுமின்றி ரயில் போக்குவரத்தும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிப்படைந்துள்ளது.