நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
நிவின் பாலி - நயன்தாரா படத்தின் வெளியீடு எப்போது?
டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி தயாரித்து நடிக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ். இப்படத்தை ஜார்ஜ் பிலீப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இயக்கி வருகின்றனர்.
நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இதற்கு முன் நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் நயன்தாரா இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
தற்போது, இப்படம் மார்ச் வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளில் வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை.
இப்படம் வெற்றிபெற வேண்டும் என நிவின் பாலி ரசிகர்கள் விரும்புகின்றனர்.