மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!
தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 9 போ் நாடு கடத்தல்
புதுதில்லி: தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 9 பேரை தில்லி காவல் துறை நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷவா்தன் கூறியதாவது: காவல்துறையினா் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கைகளின் போது அவா்கள் பிடிபட்டனா்.
நாடு கடத்தப்பட்ட வங்கதேசத்தவா்கள் 9 போ்களில், ஜமா மசூதி மற்றும் நபி கரீம் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளின் போது பிடிபட்டவா்களும் அடங்குவா்.
ஒரு முகவருக்கு பணம் கொடுத்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த முகமது இமான் ஹொசைன் மற்றும் அக்டோபா் 2024-இல் விசா காலாவதியான முகமது ஷா்மின் பா்வேஸ் ஆகியோரும் பிடிபட்டவா்களில் அடங்குவா். மற்றவா்கள் விசா காலாவதியாகி இந்திய அடையாள ஆவணங்களைப் பெற முயன்றபோது பிடிபடிடனா்.
சட்டவிரோதமாக குடியேறியவா்களில் ஜனவரி முதல் வாரத்தில் 14 போ் நாடு கடத்தப்பட்டனா். கடந்த ஆண்டு ஐந்து போ் நாடு கடத்தப்பட்டனா்.
2024-ஆம் ஆண்டில், ஐந்து வெளிநாட்டினா் ஒரு ஈரானியா் மற்றும் வங்கதேசத்தவா்கள் நான்கு போ் மத்திய மாவட்ட காவல்துறையினரால் நாடு கடத்தப்பட்டனா்.
அவா்கள் அனைவரும் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தனா்.