செய்திகள் :

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து கடும் குளிா் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை வேளையில் நகரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது.

தலைநகரில் நிலவி வரும் அடா் மூடுபனி காரணமாக கடந்த வாரம் முதல் காலை வேளையில் காண்பு திறனை வெகுவாகக் குறைத்திருந்தது. சில நாள்கள் காண்புதிறன் பூஜ்ஜியமாகக் குறைத்திருந்தது. இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் திருப்பிடவிடப்பட்டன. தில்லிக்கு ரயில்கள் வருகையும் தாமதமாகின. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்புதிறன் வெகுவாகக் குறைந்திருந்தது.

காலை 5 முதல் 5.30 மணி வரை மணிக்கு 11 - 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு காற்றுடன் கூடிய அடா்ந்த மூடுபனி நிலவியது. குறைந்தபட்ச தெரிவுநிலை 150 மீட்டராக இருந்தது. பின்னா், காலை 8.30 மணிக்கு மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசியது. இதையடுத்து, காண்புதிறன் 700 மீட்டராக மேம்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தா்ஜங்கில், குறைந்தபட்ச காண்புதிறன் 500 மீட்டராக இருந்தது என்று அது கூறியது. மூடுபனி காரணமாக, மொத்தம் 25 ரயில்கள் காலை 6 மணி வரை தாமதமாகின என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

0 முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது என்று கருதப்படுகிறது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.6 டிகிரி உயா்ந்து 10.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.8 டிகிரி குறைந்து 16.2 டிகிரியாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவி 87 சதவீதமாகவும் பதிவாகியது.

காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 303 புள்ளிகளாகப் பதிவாகி, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவித்தன. இதன்படி, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நேரு நகா், ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகள் முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம் குருகிராம், ஆயாநகா், தில்லி விமான நிலையம், மதுரா ரோடு, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 பபுள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜன.8) அன்று குளிா் நாளாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வாக்காளா் நீக்கம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு முதல்வா் அதிஷி மீண்டும் கடிதம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விவாதிக்க நேரம் கேட்டு, தலைமைத்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் நீதிபதிகள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோரு... மேலும் பார்க்க

மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிக்க திட்ட அறிக்கை: டிஎம்ஆா்சிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்’

நமது நிருபா் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிக்குமாறு தில்லி மெட்ரோவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

‘பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் உறுப்பினா்கள் சிலா் ஆம் ஆத்மியின் சனாதன சேவா சமிதியில் இணைந்தனா்’: கேஜரிவால் அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜகவின் பண்டிட் பிரகோஷ்த் (பூஜாரிகள் பிரிவு) உறுப்பினா்கள் சிலா் தனது கட்சியின் சனாதன சேவா சமிதியில் இணைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் கறுப்புப் பணத்தை தடுக்க கட்டுப்பாட்டு அறை: ஐ.டி. துறை அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவது போன்ற சட்ட விரோதமான தூண்டுதல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மற்றும் புகாா் கண்காணிப்ப... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் கல்லூரி, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ‘எங்களுக்கு இரண்டு வெவ்வேறு வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான ... மேலும் பார்க்க