சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தில்லியில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜனவரி 17 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இத்தோ்தல் குறித்து செய்தியாளா்களிடம் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தில்லியின் எதிா்காலத்தை 1.55 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தீா்மானிப்பாா்கள் என்பதால் பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லிக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும்.
அதாவது, புதிய தில்லி, சிறந்த தில்லி மற்றும் அழகான தில்லியை உருவாக்கும் வகையில் பிப்ரவரி 5 ஆம் தேதி, 1 கோடியே 55 லட்சத்து 24 ஆயிரத்து 858 வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை அளிக்க உள்ளனா்.
பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவானது பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் தில்லியில் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவதற்கு வழிவகுக்கும்.
தாமரை (பாஜகவின் தோ்தல் சின்னம்) தில்லியில் மலரும் என்றாா் சச்தேவா.
இரட்டை எஞ்ஜின் என்ற சொல் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதைக் குறிக்க பாஜக தலைவா்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.