லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில் ஒருவரது உடல் மீட்பு!
வடகிழக்கு மாநிலமான அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (ஜன.6) உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதனுள் இருந்த 9 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளிகளை மீட்க இந்திய ராணுவப்படை, கடற்படை , தேசிய மற்றும் மாநில மீட்புப் படையைச் சார்ந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.8) காலை 21 பாரா நீச்சல் வீரர்கள் சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரினுள் நீந்தி சென்றப்போது அதனுள் சிக்கிய 9 தொழிலாளிகளில், பலியான ஒருவரது உடலை மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.
இதையும் படிக்க:நெல்லியம்பதி பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
பலியானவரை அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வரும் சூழலில் மீதமுள்ள 8 பேரது நிலைக்குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.
இதுகுறித்து, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, பலியானவரது குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன் சிக்கியுள்ள மற்ற தொழிலாளிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று (ஜன.7) அந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்ப்பட்டு வந்ததாகக் கூறிய அவர் அது தொடர்பாக ஒருவரை அம்மாநில காவல் துறை கைது செய்திருப்பதாகவும் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார்.