தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.
தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி நேரத்தில் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் மாயாவதி பதிவிட்டுள்ள இடுகையில், ‘அரசு இயந்திரத்தின் தவறான பயன்பாடு, வகுப்புவாதம் மற்றும் பிற மோசமான பிரசாரங்களால் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடப்பதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன். பகுஜன் சமாஜ் கட்சி முழு தயாா் நிலையிலும் சொந்த பலத்துடன் இந்தத் தோ்தலில் போட்டியிடும். எங்களுடைய கட்சி நிச்சயம் சிறப்பாகச் செயல்படும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்று கூறியுள்ளாா்.
வாக்காளா்களுக்கு மாயாவதி விடுத்துள்ள வேண்டுகோளில், எந்தவொரு கட்சியின் ஆசையைத் தூண்டும் வாக்குறுதிகளுக்கு அடி பணியாமல், வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.