நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
AUSvIND: `பரிசளிப்பு விழாவுக்கு அழைப்பில்லை; ஆஸியில் அவமதிக்கப்பட்டாரா கவாஸ்கர்?' - பின்னணி என்ன?
பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி டெஸ்ட்டை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கோப்பையை வழங்கும் நிகழ்வில் இந்தியாவின் ஜாம்பவான் வீரர் கவாஸ்கர் அழைக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் மற்றும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இருவரையும் கௌரவப்படுத்தும் வகையில்தான் பார்டர் கவாஸ்கர் தொடர் என்றே பெயர் வைக்கப்பட்டது. அப்படியிருக்க சிட்னியில் போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு நிகழ்வில் ஆலன் பார்டரை மட்டும் மேடையேற்றியது சர்ச்சையாகியிருக்கிறது .
இதுகுறித்து பேசியிருக்கும் கவாஸ்கர், ``அந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். இது பார்டர் கவாஸ்கர் டிராபி. இது ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான உறவு சம்பந்தப்பட்டது. நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலியா வென்றதால் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.
அவர்கள் சிறப்பாக ஆடினார்கள், வென்றிருக்கிறார்கள். நான் இந்தியன் என்பதற்காக அதில் பங்கெடுக்க அழைப்பு இல்லை என்பதில் வருத்தமே. என்னுடைய நண்பரான ஆலன் பார்டருடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்." எனப் பேசியிருக்கிறார்.
ஆனால், இது கவாஸ்கரை அவமதிப்பதற்காக செய்யப்பட்ட அல்ல. ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் இந்தியா வென்றால் கவாஸ்கரும் வெற்றிக் கோப்பையை வழங்க வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சியின் திட்டமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.