நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
திமுகவை வீழ்த்த ஒரே அணியில் திரள வேண்டும்: டிடிவி தினகரன்
திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், ”2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்துதான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்தாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. அதனால்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஹிட்லர்போல் செயல்படுகிறார்.
எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தினார், ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்.
ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்பது முன்வைக்கப்படுகிறது. திமுகவில் இருப்பவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள்.
இதையும் படிக்க:புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப் படையினர் அதிகமாகிவிட்டனர். தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என்பது ஒரு பக்கம், விலைவாசி உயர்வு என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக கட்டாயம் 200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது. இந்த ஆட்சி அடுத்த முறை தொடராது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்று தமிழ்நாட்டில் இனி ஒரு சம்பவம்கூட நடக்கக்கூடாது.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் ஒன்றிணைைய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுகவை, வெல்ல வேண்டும் என்றால், அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிதான் சரியான தீர்வாக இருக்கும். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியான பா.ஜ.க.வை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக அதிமுகவை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.
பழனிச்சாமி இன்றுவரை தப்பிக்க காரணம் திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதால்தான்” எனப் பேசினார்.